Print this page

ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம் கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்து. குடி அரசு - சொற்பொழிவு - 13.11.1932 

Rate this item
(0 votes)

இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேசப்பக்திக் கிளர்ச்சிக்கும் ஜாதியக் கிளர்ச்சிக்கும் அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறு பட்டிருப்பதாகவும் இவ்வித கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ டயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங் களைச் சொல்லிக் கொண்டு அதின் பேரால் சோம்பேரி வாழ்க்கைப் பிரியர் களாலும், பேராசைக்காரர்களாலும் நடத்தப்படும் போட்டி "வியாபாரங்களே” இன்று தேசியமாயும், ஜாதீயமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர அவற்றுள் நாணயமோ உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை யென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப்பிடித்து வெடிக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகின்றதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டு மென்றும், இப்போதையப் பெரும்பாக கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்ப தற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார். 

குறிப்பு:20-10-19.32 இரவு கொழும்பு பாஷியன் விடுதியில் தோழர் டி.சாரனாதன் மற்றும் சில செட்டித் தெரு தோழர்கள் ஆகியோர் அளித்த விருந்தில் கலந்து கொண்டு பேசியது. 

குடி அரசு - சொற்பொழிவு - 13.11.1932

 
Read 36 times